மக்தப் உரையாடல்
அப்துல்லாஹ்:நண்பரே!அஸ்ஸலாமு அலைக்கும்
ஷாஜஹான் :வ அலைக்கும் ஸலாம் நண்பரே
அப்துல்லாஹ்:மார்க்க விஷயங்களை நாம் பேசுவோமா?
ஷாஜஹான் :தாராளமாக பேசுவோமே
அப்துல்லாஹ்:குர்ஆன் ஷரீப் எந்த மாதம் எந்த இரவில் இறங்கியது?
ஷாஜஹான் :ரமழான் மாதம் பிறை 27 லைலத்துல் கத்ர் என்னும்
புனிதமான இரவில் இறங்கியது.
அப்துல்லாஹ்:குர்ஆனில் கூறப்படும் மக்கீ,மதனீ என்றால் என்ன?
ஷாஜஹான் :மக்கீ என்றால் மக்காவில் இறங்கியது,
மதனீ என்றால் மதீனாவில் இறங்கியது.
அப்துல்லாஹ்:குர்ஆனின் தனமைகள் யாது?
ஷாஜஹான் :உலகத்தார்களுக்கு அருட்கொடையாகவும் நேர்வழி காட்டக்கூடியதாகவும் இருக்கிறது.
அப்துல்லாஹ்:குர்ஆனின் மற்றொரு சிறப்புகள் என்ன?
ஷாஜஹான் :யார் திருக்குர்ஆனைக் கற்று,அதன்படி அமல் செய்கிறாரோ நாளை மறுமை நாளில் அவருக்காக அல் குர்ஆன் ஷரீப் (ஷபாஅத்)பரிந்துரை செய்யும் நண்பரே!
அப்துல்லாஹ்:குர்ஆனில் உள்ள ஜூஸ்வுக்கள் எத்தனை?சூராக்கள் எத்தனை?வசனங்கள் எத்தனை?
ஷாஜஹான் : 30ஜூஸ்வுக்கள்,114சூராக்கள்,6666 வசனங்களும் உள்ளன.
அப்துல்லாஹ்:நபி (ஸல்)அவர்களின் பெயர் திருக்குர்ஆனில் எத்தனை இடங்களில் இடம் பெற்றுள்ளன?
ஷாஜஹான் :முஹம்மது என்று நான்கு இடங்களிலும்,அஹ்மத் என்று ஒரு தடவையும் ஆக ஐந்து இடங்களில் வந்துள்ளது.
அப்துல்லாஹ்:குர்ஆனில் ஆரம்பமாக இறக்கியருளப்பட்ட சூரா எது?
ஷாஜஹான் :ஆரம்பமாக இறங்கிய சூரா இக்ரஃ என்ற சூராவாகும்.இறுதியாக இறஙகிய சூரா தவ்பா என்ற சூரவாகும்.
அப்துல்லாஹ்:குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி என சிறப்பித்துக் கூறப்பட்ட சூரா எது?
ஷாஜஹான் :சூரத்துல் இக்லாஸ் குல் ஹுவல்லாஹு அஹத் என்ற சூராவாகும்.
அப்துல்லாஹ்:நண்பரே அழகாய் சொல்கிறாய்!
சரி நண்பரே திருக்குர்ன் முழுவதும் இறங்குவதற்கு எத்தனை வருடங்கள் ஆனது?
ஷாஜஹான் :23ஆண்டுகள் ஆனது.
அப்துல்லாஹ்:அல்குர்ஆனுக்கு மற்றோரு பெயர்களில் சிலவற்றைக் கூறு?
ஷாஜஹான் : அல்புர்கான்,அல்கிதாப், அத் திக்ர்,அந்நூர்,அல்ஹுதா.
அப்துல்லாஹ்:முதன் முதலாக திருக்குர்ஆன் எந்த இடத்தில் வைத்து அருளப்பட்டது?
ஷாஜஹான் :மக்காவிலுள்ள ஹிரா என்ற குகையில் அருளப்பட்டது.
அப்துல்லாஹ்:அல்ஹம்துலில்லாஹ்!அற்புதமாய் சொன்னாய் இதுபோல் அமல் செய்வதற்கு அல்லாஹ் கிருபை செய்வானாக!
போய் வருகிறேன் நண்பரே!அஸ்ஸலாமு அலைக்கும்.
ஷாஜஹான் :ஆமீன் ஆமீன்.வ அலைக்கும் ஸலாம் நண்பரே!
நானும் போய் வருகிறேன். ஷாஜஹான் : ஷாஜஹான் :

அல்ஹம்துலில்லாஹ்
ReplyDelete