Friday, March 24, 2017

மக்தப் 20 ஹதீஸ்


              மக்தப் 20 ஹதீஸ்    
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ  اللَّهُ الصَّمَدُ
                                                                                                                                             குல் ஹுவல்லாஹு அஹத் அல்லாஹுஸ் ஸமத் 

பொருள் :(நபியே!)நீர் கூறுவீராக அவன் அல்லாஹ் ஒருவனே.
அல்லாஹ் (எவரிடமும்)தேவையற்றவன் (112:1,2)

சுவர்க்கத்தின் சாவி எது?


مفتاح الجنة الصلاة
மிஃதாஹுல் ஜன்னத்தி அஸ்ஸலாத்து 
பொருள் :சொர்க்கத்தின் சாவி தொழுகையாகும் (நூல்:அஹ்மத்)
 

தூக்கத்தை விட்டு எழுந்ததும் ஓதும் துஆ

الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور 
அல்ஹம்துலில்லாஹில்லதீ அஹ்யானா பஃதமா அமாத்தனா வ 
இலைஹின் நுஷூர்.
பொருள்:எங்களை நித்திரையிலிருந்து விழிக்கச் செய்த 
அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.மேலும் எழுப்பப்படுதல் அவன் 
பக்கமே.
 
மலம் ஜலம் கழிக்கச் செல்லும் போது
اللهم اني اعوذ بك من الخبث و الخبائث 
அல்லாஹும்ம  இன்னீ அஊது பிக்க மினல் குபுஸி வல் கபாஇஸி
பொருள் :யாஅல்லாஹ் ஆண்,பெண் ஷைத்தான்களின் கெடுதிகளை 
விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
 
மலம்,ஜலம் கழித்த பின்  
 غفرانك الحمد لله الذي أذهب عني الأذى وعافاني
குஃப்ரானக அல்ஹம்துலில்லாஹில்லதீ அத்ஹப அன்னியல்  அதா வ 
ஆஃபானீ
பொருள்:யாஅல்லாஹ் உன் மன்னிப்பை வேண்டுகிறேன்.என் வயிற்றில் 
வேதனை செய்யக்கூடிய அசுத்தங்களை வெளியாக்கி,எனக்கு 
ஆரோக்கியத்தைத் தந்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.
 
மஸ்ஜிதுக்குள் நுழையும்போது
اللهم افتح لي ابواب رحمتك

 அல்லாஹும் மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மத்திக்க 
பொருள்:யாஅல்லாஹ் உன் ரஹ்மத்துடைய வாசல்களை எனக்கு 
திறந்து விடுவாயாக!
 மஸ்ஜிதை விட்டு வெளியே வரும்போது  
 اللهم اني اسئلك من قضلك و رحمتك

  அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க மின்ஃபழ்லிக்க வ ரஹ்மதிக்க 
பொருள் :யாஅல்லாஹ் உன்னுடைய கருணையையும்,அருளையும் உன்னிடத்தில் வேண்டுகிறேன்.
சாப்பிட்ட முடித்த பின் ....
 الحمد لله الذى اطعمنا و سقانا و جعلنا من المسلمين

  அல்ஹம்துலில்லாஹில்லதீ அத்அமனா வ ஸகானா வ ஜஅலனா 
மினல் முஸ்லிமீன்
பொருள்:எங்களுக்கு உணவளித்து நீர் புகட்டி எங்களை முஸ்லிம்களில் உள்ளவர்களாக்கி வைத்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.

நோயாளியை சந்தித்தால்.....
  لا بأس طهور ان شاءالله
லா ஃஸ தஹூருன் இன்ஷா அல்லாஹ் 

பொருள்:பயம் வேண்டாம் அல்லாஹ் நாடினால் இந்நோய் (பாவங்களை)சுத்தப்படுத்தும். 

வீட்டை விட்டு புறப்படும் போது...
بسم الله توكلت علي الله لا حول ولا قوة الا بالله
பிஸ்மில்லாஹி தவக்கல்த்து அலல்லாஹி லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் 
பொருள்:அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டவனாக அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி (வெளியில் செல்கிறேன்)பாவத்தை விட்டு நீங்குவதும்,நன்மை செய்ய சக்தியும் அல்லாஹ்வின் உதவிக்கு கொண்டே தவிர இல்லை.
 
தஹ்தஷ்ஷஜரா குழுவினர்கள்:
மௌலவி  ஜஃபர் சாதிக் நூரி 
மௌலவி  முஹம்மது ஹுசைன் சிராஜீ 
மௌலவி அப்துல் காதிர் ரஹ்மானீ
மௌலவி ரசூல் மைதீன் சிராஜீ
மௌலவி மஹ்மூதுல் ஹஸன் தாவூதீ
மௌலவி சுல்தான் ஜைனீ.  
                                                                                                          

2 comments: