ஹதீஸ் 40 பாகம் 1
ஹதீஸ் 40 பாகம் 1
1, பிறருக்கு உதவி செய்
قال رسول الله صلي الله عليه وسلم الدين النصيحة
மார்க்கமென்பது பிறர் நலம் நாடுவதாகும் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நூல் :முஸ்லீம்.
2, பிரார்த்தனையின் பலன்
الدعاء مخ العبادة
பிரார்த்தனை வணக்கத்தின் சாரமாகும் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நூல்:திர்மிதீ.
3, நட்பு கொள்வதின் பலன்
المرء مع من احي
மனிதன் அவன் யாரை நேசிக்கிறானோ அவனோடு (கியாம நாளில்)இருப்பான் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நூல்:புகாரீ.
4, நிதானம் தேவை
الاناة من الله و العجلة من الشيطان
நிதானம் இறைவனின் குணமாகும்.அவசரம் ஷைத்தானின் குணமாகும் என ரஸூல் (ஸல்)அவர்கள் கூறினார்கள். நூல் :திர்மிதீ.
5, இரகசியம் பாதுகாப்போம்
المجالس بالامانة
சபையில் பேசப்படுகின்ற விஷயங்கள் அவைகள் அமானிதமாகும்.(பாதுகாக்கப்பட வேண்டியவை)என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
நூல் :அபூதாவூத்.
6, உலகம் முஃமின்களுக்கு சிறைச்சாலை
الدنيا سجت المؤمن و جنة الكافر
உலகம் விசுவாசிகளுக்கு சிறைச்சாலையாகவும்,நிராகரிப்போருக்கு சுவர்க்கப் பூஞ்சோலையாகவும் இருக்கின்றது என ரஸூல் (ஸல்)அவர்கள் கூறினார்கள். நூல் :முஸ்லீம்.
7, நன்றி செலுத்துவோம்
الطاعم الشاكر كالصائم الصابر
உண்டபின் நன்றி செலுத்தக் கூடியவன் பொறுமையுள்ள நோன்பாளியைப் போலாவான் என ரஸூல் (ஸல்)அவர்கள்
கூறினார்கள். நூல் :திர்மிதீ.
8, ஸலாம் சொல்வோம்
البادئ بالسلام بريئ من الكير
ஸலாம் கூறுவதில் முந்துபவன் பெருமையை விட்டும் நீங்கியவனாவான் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
நூல் :பைஹகீ.
9,மிஸ்வாக் செய்வதின் பலன்
السواك مطهرة للفم مرضاة للرب
மிஸ்வாக்கு செய்வது வாயை சுத்தமாக்குவதாகும்.அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றுத் தருவதாகும் உள்ளது என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நூல் :அஹ்மத்.
10, புறம் பேசாதீர்
الغيبة اشد من الزنا
புறம் பேசுவது விபச்சாரத்தைவிட கடுமையான பாவமாகும் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். நூல் :பைஹகீ.
தஹ்த்தஷ்ஷரா குழுவினர்கள் :
மௌலவி K ஜஃபர் சாதிக் நூரி
மௌலவி VA முஹம்மது ஹுசைன் சிராஜீ
மௌலவி S M K அப்துல் காதிர் ரஹ்மானீ
மௌலவி S ரசூல் மைதீன் சிராஜீ
மௌலவி A மஹ்மூதுல் ஹஸன் தாவூதீ
மௌலவி M ஷாஜஹான் உஸ்மானீ
மௌலவி K அப்துல் காதீர் காஸிமி
மௌலவி S அல்லா பகஷ் மன்பஈ
மௌலவி S சுல்தான் ஜைனீ.
احي
ReplyDeleteகிடையாது
احب
பாரகல்லாஹ்
ReplyDelete