விளையாட்டும் இஸ்லாமும்
உலகில் ஒவ்வொரு காரியத்திற்கும் இஸ்லாம் வரைமுறையை வகுத்துள்ளது.அந்த வரைமுறை எல்லை மீளும்பொழுது ஆபத்தாக முடிவடையும்.அவ்வாறே விளையாட்டிற்கும் வரைமுறையை வகுத்துள்ளது.பொதுவாக விளையாடுவது மூன்று நோக்கங்களுக்காக உள்ளது.
1,திறமையை வளர்பதற்க்காக
2,பொழுது போக்கிற்காக
3,சூதாட்டத்திற்காக
இதில் முதல் வகையை மார்க்கம் அனுமதிக்கிறது, மற்ற இரண்டு வகையையும் தடுக்கிறது.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَن َّرَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ , قَالَ :
" كُلُّ شَيْءٍ مِنْ لَهُوِ الدُّنْيَا بَاطِلٌ إِلا ثَلاثَةٌ :
انْتِضَالُكَ بِقَوْسِكَ ، وَتَأْدِيبُكَ فَرَسَكَ ، وَمُلاعَبَتُكَ
أَهْلَكَ ، فَإِنَّهَا مِنَ الْحَقِّ
உலக விளையாட்டுகளில் மூன்றைத்தவிர மற்ற அனைத்தும் வீணானதாகும்.
1,அம்புப் பயிற்சி எடுப்பது.
2,குதிரையை பயன்படுத்துவது.
3,மனைவியிடத்தில் விளையாடுவது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:ஹாகிம்)
தொழுகை மற்றும் அல்லாஹ்வின் சிந்தனையை விட்டும் மறக்கக்கூடிய அனைத்து விளையாட்டுகளும் தடுக்கப்படவேண்டியவையாகும்.
قال النبي صلي الله عليه و سلم كل ما الهي عن ذكر الله و عن الصلات فهو ميسر
தொழுகை மற்றும் அல்லாஹ்வின் சிந்தனையை விட்டும் மறக்கக்கூடிய அனைத்தும் சூதாட்டமாகும். (நூல்: பைஹகீ)
விளையாட்டின் மூலம் தொழுகை போன்ற கடமைகளும் குர்ஆன்,ஹதீஸ்,பிக்ஹு போன்றவற்றை படிப்பது உட்பட செய்யவேண்டிய வேலைகளும் வீணாகி விடக்கூடாது.
உமர்(ரலி)அவர்களுடன் ஒரு குழு ஹஜ்ஜுக்கு புறப்பட்டது,போகும் வழியில் 'கவ்வாத்'என்பவரை கவி பாடுமாறு மக்கள் வேண்டினர்.அவரும் கவி பாடிக் கொண்டு வந்தார். Fபஜ்ரு நேரம் வந்தவுடன் உமர் (ரலி) அவர்கள் கவ்வாத் அவர்களே!நிறுத்துங்கள் தொழுகைக்கு நேரமாகி விட்டதுஎன்று கூறினார்கள். குறிப்பிட்ட எல்லை நிர்ணயித்து ஓடுபவர்களாகவும் ஒருவருக்கொருவர் சிரிப்பவர்களாகவும் சஹாபாக்களை நான் பார்த்திருக்கிறேன் ஆனால் இரவு நேரம் வந்துவிட்டால் துறவிகளாக (வணங்கக் கூடியவர்களாக) ஆகிவிடுவார்கள் என்று பிலாளிப்னு ஸஅத் (ரஹ் ) அவர்கள் கூறுகிறார்கள்.(மிஷ்காத்)
ஓட்டப்பந்தயம்
நபிதோழர்களான அப்துல்லாஹ் (ரலி), உபைதுல்லா (ரலி), மற்றும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பிள்ளைகளுக்கு மத்தியில் பெருமானார் அவர்கள் ஓட்டப்பந்தயம் நடத்தினார்கள். என்னிடம் யார் முதலிலே வந்து வெற்றி பெறுவீர்களோ அவர்களுக்கு இன்ன இன்ன பரிசுகள் உண்டு என சொல்வார்கள். அப்படி ஓட்டப்பந்தயத்தில் கலந்து தமக்கு முன்பாக ஓடி வந்து நிற்கும் அனைத்து குழந்தைகளையும் மகிழ்ச்சியில் கட்டியணைத்து முத்தமிட்டு ஆர்வமூட்டுபவர்களாக அண்ணலார் இருந்தார்கள், என அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் (ரலி) என்ற நபிதோழர் சொல்கிறார்.
பெருமானாருக்கும், மனைவியான ஆயிஷா (ரலி) இருவருக்குமிடையே ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. அதில் ஒருமுறை நாயகமும், மற்றொரு முறை ஆயிஷா அவர்களும் வெற்றி பெற்றார்கள்.
குதிரை பந்தயம்
ஒரு நடைபெற்ற குதிரை பந்தயத்தில் தான் வெற்றிபெற்றதாக ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள். குதிரை பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு வெகுமதிகளும் வழங்கப்பட்டன.
மல்யுத்தம்:
பலத்தை மட்டும் வெளிப்படுத்தும் நோக்கில் நட்புறவோடு மல்யுத்தப் போட்டிகள் பெருமானார் காலத்தில் நடைபெற்றது. மதீனாவின் யாரும் எளிதில் சாய்த்திட முடியாத பலம் வாய்ந்த மல்யுத்த வீரராக இருந்த ருகானா இப்னு ஜைது என்பவரோடு பெருமானார் (ஸல்) அவர்கள் மல்யுத்தம் செய்து வெற்றிபெற்றார்கள்.
வீர வாள் விளையாட்டு:
நாயகம் அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்குள் வந்த போது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியில் வீர வாள் விளையாட்டு நடைபெற்றது. அதை தடுக்கச் சென்ற உமர் அவர்களிடம் ‘உமரே விளையாடட்டும் விட்டுவிடுங்கள்’ என நாயகம் சொன்னார்கள்.
பளுதூக்குதல்:
கனமான கற்களை வைத்து பளுதூக்குகின்ற முறைக்கு ‘அர்ருப்ஹ்’ என்று அரபுலகில் அழைக்கப்பட்டது. பளுதூக்குதலில் பிரசித்தி பெற்றவர்களாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் அன்சாரி என்கிற நபித்தோழர் இருந்தார்.

நான்
நபி(ஸல்) அவர்களுடன் சில பயணங்களில் சென்றிருக்கிறேன்.அப்போது உடல்
பருமனில்லாமல் (ஒல்லியாக) இருந்தேன். அப்போது முன்னே செல்லுங்கள்! முன்னே
செல்லுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் மக்களிடத்தில் சொôன்னார்கள்.
பிறகு என்னிடத்தில் என்னுடன் ஒட்டப் பந்தய போட்டிக்கு வா! என்றார்கள்.
நான் அவர்களுடன் போட்டிக்கு சென்று அவர்களை முந்தினேன். அப்போது (மீண்டும்
ஓடுவது பற்றி) என்னிடத்தில் எதுவும் சொல்லவில்லை. என் உடல் பருமனானது.நான்
(ஏற்கனவே நடந்த ஓட்டப்பந்தயம் பற்றி) மறந்துவிட்டேன். அவ்வாறே அவர்களுடன்
பயணத்தில் சென்றேன். அப்போது அவர்கள் மக்களிடத்தில் சொன்னார்கள் முன்னே
செல்லுங்கள்! முன்னே செல்லுங்கள்! பிறகு என்னிடத்தில் என்னுடன் ஒட்டப்
பந்தயத்திற்கு வா என்றார்கள். நான் அவர்களுடன் போட்டி போட்டேன். அவர்கள்
என்னை முந்திவிட்டு சிரித்துக் கொண்டே அதற்கு பதிலாக இது என்றார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : அஹ்மத் 25075
குதிரை பந்தயம்
ஒரு நடைபெற்ற குதிரை பந்தயத்தில் தான் வெற்றிபெற்றதாக ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் சொல்கிறார்கள். குதிரை பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு வெகுமதிகளும் வழங்கப்பட்டன.
மல்யுத்தம்:
பலத்தை மட்டும் வெளிப்படுத்தும் நோக்கில் நட்புறவோடு மல்யுத்தப் போட்டிகள் பெருமானார் காலத்தில் நடைபெற்றது. மதீனாவின் யாரும் எளிதில் சாய்த்திட முடியாத பலம் வாய்ந்த மல்யுத்த வீரராக இருந்த ருகானா இப்னு ஜைது என்பவரோடு பெருமானார் (ஸல்) அவர்கள் மல்யுத்தம் செய்து வெற்றிபெற்றார்கள்.
ஒட்டகப் பந்தயம்
நபி(ஸல்) அவர்கள் குதிரை ஏற்றம், அம்பெறிதல் இவற்றில் மட்டும் வீரராக சிறந்து விளங்கவில்லை. ஒட்டக பந்தயத்திலும் தன் திறமையை காட்டினார்கள்.
நபி(ஸல்)
அவர்களுக்கு ஒரு ஒட்டகம் இருந்தது . அதன் பெயர் அழ்பா. அதை யாரும்
போட்டியில் தோற்கடிக்க முடியாது. சேனம் பூட்டப்பட்ட ஒட்டகத்தில்
அமர்ந்தவாறு ஒரு கிராமவாசி வந்தார். நபி(ஸல்) அவர்களை அவர் போட்டியில்
முந்திவிட்டார்.இது முஸ்லிம்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது.பைலா
தோற்றுவிட்டதே என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள்
அல்லாஹ்வுக்கென்றுள்ள உரிமை அவன் உயர்த்திய எந்த பொருளையும்
தாழ்த்துவதாகும். என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி)
நூல் : புகாரி 6501
நபி(ஸல்)
அவர்களுடைய ஒட்டகமான அழ்பாவை தோற்க முடியாது என்று அனஸ்(ரலி) அவர்கள்
கூறுவதிலிருந்து பலதடவைகள் நபி(ஸல்) அவர்கள் ஒட்டகப்பந்தயத்தில் கலந்து
கொண்டுள்ளதாக அறியமுடிகிறது.
வீர வாள் விளையாட்டு:
நாயகம் அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்குள் வந்த போது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியில் வீர வாள் விளையாட்டு நடைபெற்றது. அதை தடுக்கச் சென்ற உமர் அவர்களிடம் ‘உமரே விளையாடட்டும் விட்டுவிடுங்கள்’ என நாயகம் சொன்னார்கள்.
பளுதூக்குதல்:
கனமான கற்களை வைத்து பளுதூக்குகின்ற முறைக்கு ‘அர்ருப்ஹ்’ என்று அரபுலகில் அழைக்கப்பட்டது. பளுதூக்குதலில் பிரசித்தி பெற்றவர்களாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் அன்சாரி என்கிற நபித்தோழர் இருந்தார்.
அம்பெறிதல்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்பெறிந்து விளையாடக் கூடிய சிலரை கடந்து சென்றார்கள். இஸ்மாயீலின் சந்ததிகளே அம்பெறியுங்கள் ஏனென்றால் உங்கள் தந்தை அம்பெறிபவராகத் தான் இருந்தார்.நீங்களும் எரியுங்கள் நான் இன்ன கூட்டதாருடன் சேர்ந்து கொள்கிறேன். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அந்த இரண்டு கூட்டத்தினரில் ஒரு கூட்டத்தினர் அம்பெறியாமல் நின்றனர்.நீங்கள் ஏன் அம்பெறியவில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நீங்கள் அவர்களணியில் இருக்கும் போது நாங்கள் எப்படி அம்பெறிய முடியும். என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அம்பெறியுங்கள் நான் உங்கள் இருவரின் அணியுடனும் இருக்கிறேன் என்றார்கள்.
அறிவிப்பவர் : ஸலமா இப்னு அல் அக்வா(ரலி)
நூல் : புகாரி 2899
இந்த
அம்பெறிகின்ற விளையாட்டு என்பது இன்றைய விளையாட்டை போன்று கிருக்குத்
தனமான போதையை உண்டாக்காது. சிந்தனையையும் உடலையும் சீராக்கக்கூடியது.
இன்றைக்கு ஒலிம்பிக் போட்டியில் கூட இடம்பெற்றுள்ளது. இன்னும் நபி(ஸல்)
அவர்கள் போர்களத்தில் எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள மட்டுமே இந்த
வில்வித்தையை பயன்படுத்த அனுமதியளித்துள்ளார்கள். அதுவல்லாமல் எந்த
உயிரினத்துக்கும் இந்த விளையாட்டால் தீங்கு செய்வதை தடுத்துள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உயிருள்ள பொருள் எதையும் அம்பெறிவதற்கு இலக்காக எடுத்துக் கொள்ளாதீர்கள்
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் 3617
தடை செய்யப்பட்ட விளையாட்டுக்கள்:
இன்று விளையாட்டுக்கள் சூதாட்டம் இல்லாத விளையாட்டுக்கள் இல்லை.
அல்லாஹ் திருமறையில்:
நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள் (அல் குர்ஆன் 5:90)
யார்
தாய விளையாட்டை விளையாடுகிறார்களோ பன்றியின் இறைச்சியையும் அதன்
இரத்தத்தையும் சாப்பிடுவதற்கு தன் கையில் தயாராக வைத்திருப்பதை போன்றாவார்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி) நூல் : முஸ்லிம் 4194
நபி
(ஸல்) அவர்கள் வீணாக கற்களை சுண்டி விளையாடவதை தடைசெய்தார்கள்.ஏனென்றால்
அது வேட்டையாடவோ எதிரிகளை வீழ்த்தவோ பயன்படாது. கண்ணை பதம்பாக்கவும் பல்லை
உடைக்கவும் தான் செய்யும் என்றார்கள்
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல்(ரலி) நூல் : புகாரி 6220
ஏனென்றால்
இதில் புத்திக்கும் உடலுக்கும் எந்த வேலையும் இல்லை. சோவியை உருட்டிவிட்டு
அதிஷ்டத்தை எதிர்பாக்கக்கூடிய பயனற்ற விளையாட்டாக உள்ளது.
நபி
(ஸல்) அவர்கள் வீணாக கற்களை சுண்டி விளையாடவதை தடைசெய்தார்கள்.ஏனென்றால்
அது வேட்டையாடவோ எதிரிகளை வீழ்த்தவோ பயன்படாது. கண்ணை பதம்பாக்கவும் பல்லை
உடைக்கவும் தான் செய்யும் என்றார்கள்
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல்(ரலி)
நூல் : புகாரி 6220
நீல திமிங்கலம் (blue whale)
சமீபத்தில் உயிரையே மாய்த்துக்கொள்ளும் (blue whale) நீல திமிங்கலம் எனும் விளையாட்டில் பல இளைஞர்கள் அந்த விளையாட்டில் மூழ்கி தன்னையே உயிரை விடும் அளவிற்கு இன்றைய அபாய சூழ்நிலை உருவாக்கி உள்ளது.
இதைப் பற்றிய ஓர் ஆய்வு:
உயிரை பறிக்கும் ப்ளூவேல் விளையாட்டு என்றால்
என்னவென்று தெரியாமலையே , அந்த விளையாட்டை விளையாடினால் தற்கொலை
செய்துக்கொள்கிறார்களாமே என தான் கேள்விப்பட்டு வருகிறோம். ஆனால் உண்மை
என்ன ? அந்த விளையாட்டில் என்னதான் இருக்கிறது என்பதை பார்க்கலாம் .
இந்த விளையாட்டை விளையாடுவதால் ,உயிர் போவதில்லை. உயிரை விடுவதற்காகவே இந்த விளையாட்டை விளையாடுகிறார்கள்.
இதில்
என்ன ஒரு கொடுமை என்றால். இந்த விளையாட்டை விளையாட கொடுக்கப்படும்
கால அவகாசம் 50 நாட்கள் தான் .அதாவது இந்த 50 நாட்களில் எப்பொழுது
வேண்டுமானாலும் தற்கொலை செய்து கொள்ளலாம்.
இது தான் இந்த கேமின் டார்கெட்.
விவரம்
50 நாட்கள் கால அவகாசம்
50 நாட்கள் - ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டாஸ்க்
தினமும் காலை சரியாக 4.20 மணிக்கு எழுதல் வேண்டும்
பின்னர்
ஆரார் மூவீஸ் பார்க்க வேண்டும் , நாம் வசிக்கும் இடத்தில் உள்ள அதிகமான
உயரம் கொண்ட கட்டிடத்தின் மேல் நிற்க வேண்டும்.பின்னர் போட்டோ எடுத்து
அனுப்ப வேண்டும்.
இந்த விளையாட்டின் அட்மின்களாக செயல்படுபவர்களை curator என சொல்லப்படுகிறது
curator என்ற ஒருவர், இந்த டாஸ்கை தினமும் செய்ய வலியுறுத்துவார்.
மேலும் curator ஒரு மியூசிக் அனுப்புவார். அதனை கேட்க வேண்டும்
பின்னர் தன் கை கால் மற்றும் எதாவது ஒரு இடத்தில் அறுத்து, அந்த போட்டோவை எடுத்து curator க்கு அனுப்பி வைக்கணும்....
ப்ளூ வேல் என்றால் என்ன ?
நீல
திமிங்கலம் . இந்த திமிங்கலம் படத்தை நம் கைகளில் வரைய வேண்டும்,
அதாவது அறுத்துக்கொள்ளவேண்டும்....பின்னர் அதனையும் ஒரு டாஸ்க்காக
முடித்து விட்டு curator -கு அனுப்பி வைக்க வேண்டும்
பின்னர் அடுத்த நாள் இதே போன்ற டாஸ்க் தொடரும்.
ஒவ்வொரு
நாளும் இதை செய்யவில்லை என்றால், மிரட்டல் பன்மடங்கு அதிகரிக்கும், மன
அழுத்தம், மன உளைச்சல் என அனைத்தும் தொடரும்.ஒரு விதமான பயம்
இருக்கும். கடைசியில் தற்கொலை தான் ......
இவை அனைத்தும் 50 நாட்களுக்குள் முடிந்துவிடும் .....

இந்நிலையில் புது டெல்லி இந்தோரை சேர்ந்த 14 வயது சிறுவன் ப்ளூ வேல்
விளையாட்டிற்கு அடிமையாகி தனது பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து
தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரை
சகமாணவர்கள் காப்பாற்றினார்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சிறுவனை விசாரித்தப்பின் கூறுகையில்
"ஆரம்பத்தில் சிறுவன் அவ்விளையாட்டை கண்டு பயந்ததகவும், பின் அவரால்
அவ்விளையாட்தில் கொடுக்க பட்ட கட்டளைகளை செய்யமுடியததல் தற்கொலைக்கு
முயன்றுள்ளார் என தெரிவித்தது.
எத்தனை உயிர்கள்:
திருப்பரங்குன்றம், மதுரை விளாச்சேரி மொட்டமலை பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி பேக்கரியில் மாஸ்டராக உள்ளார், இவரது மனைவி டெய்சி ராணி.
இவர்களது மகன் விக்கி,19, தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்தார்.
நேற்று ஜெயமணி வழக்கம் போல் வேலைக்கு சென்று, மாலை 6:30 மணிக்கு வீடு திரும்பினார்.
வீட்டின் உள்ளே வந்த அவர் அறை ஒன்றில் தன் மகன் விக்கி துாக்கில் பிணமாக தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ஆஸ்டின்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார்.அங்கு வந்த போலீசார் விக்கியின் இடது கையில் 'புளூவேல்' என்று
எழுதியிருப்பதை கண்டறிந்தனர்.

சமீபத்தில் கூட கேரளாவில் 16 வயது சிறுவன் தூக்கில் தொங்கி மரணம் அடைந்தான்.
உலகம் முழுவதும் சிறுவர், சிறுமிகளை
அடிமைப்படுத்தியுள்ள புளுவேல் ஆன்லைன் கேமால் இதுவரை சுமார் 3000 பேர்
பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிலும் இந்த விளையாட்டு காரணமாக
பலியான உயிர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து இந்த விளையாட்டுக்கு மத்திய
அரசு சில நாள்களுக்கு முன் தடை விதித்தது. இந்த விளையாட்டு தொடர்பான
இணைப்புகளை உடனே நீக்குமாறு கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட இணையதள
சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் இதுதொடர்பாக பதிவு
செய்யப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றின் விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் இன்று
நடைபெறுகிறது. இந்த ஆன்லைன் கேமுக்கு தடை வருமா? என்பது இன்று
தெரியவரும். இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த விளையாட்டை தடை
செய்ய வேண்டும் என்று பல நாடுகளில் குரல்கள் வலுத்து வருகின்றனர்
இந்த நிலையில் நீல திமிங்கல விளையாட்டுக்கு மூளையாக செயல்பட்டு வந்த 17 வயது மாணவி மற்றும் வாலிபர் ஒருவரை ரஷிய அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் அடிப்படையில் நாடு முழுவதும் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கைது செய்யப்பட்ட மாணவியிட விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விளையாட்டின் பிறப்பிடமான ரஷியாவில் ‘நீல திமிங்கலம்’ விளையாட்டை உருவாக்கியவரும், நிர்வாகியாக (அட்மின்) செயல்பட்டவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. நீல திமிங்கலம் விளையாட்டை முற்றிலும் இணையதளத்தில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் குறித்து ரஷிய போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون "
மேலும் இவ்வுலக வாழ்க்கை வீணும்,விளையாட்டுமே தவிர வேறொன்றுமில்லை.அவர்கள் அறிந்தவர்களாக இருப்பின் நிச்சயமாக மறுமையின் வீடு,அதுவே (நித்திய) வாழ்க்கையாகும்.
(அல் குர்ஆன் 30:64)
பெற்றோர்களே !
உங்கள் குழந்தைகளுக்கு ஏழு வயதாகும் போது தொழச்சொல்லி ஏவுங்கள்; பத்து வயதாகும் போது தொழவில்லையெனில் (காயம் ஏற்படாதவாறு) அடியுங்கள்! மேலும் படுக்கையிலிருந்து பிரித்து வையுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : அபூதாவுத் 495).
மனிதன் இறந்துவிட்டால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அனைத்து அமல்களும் அவனைவிட்டு துண்டிக்கப்பட்டு விடுகிறது. (அவை) நிரந்தர தர்மம், பயன்தரும் கல்வி, அவருக்காக துஆச் செய்யும் சாலிஹான குழந்தை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி); ஆதாரம் : முஸ்லிம்)
"المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا "
செல்வமும் பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்."
(ஸூரத்துல் கஹ்ஃப்: 46)
"நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள் உங்கள் பொறுப்பு பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளர் அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். ஆண்மகன் குடும்பத்தில் பொறுப்புதாரி அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். பெண் தனது கணவன் வீட்டில் பொ றுப்புதாரி அவரது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார். வேலைக்காரர் தனது எஜமானனின் சொத்தில் பொறுப்புதாரி அவரது பொறுப்பு பற்றி விசாரிக் கப்படுவார்." (ஆதாரம்: அல்புகாரி, முஸ்லிம், அபூதாவுத், அத்திர்மதி)
"முஃமின்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும் கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்." (அல் குர்ஆன் 66:06)
இது போன்ற தேவையில்லாமல் விளையாடி உடலுக்கு பாதிப்பை உண்டாக்கூடிய விளையாட்களை இஸ்லாம் தடைசெய்துள்ளது. எனவே இஸ்லாம் வணக்க வழிபாட்டிற்காக மார்க்கம். அது ஏழைகளின் வறுமையை போக்கவும் செல்வந்தர்கள் தங்களுடைய பொருளாதாரத்தை பாதுகாத்துக் கொள்ளும் ஒரு பொருளாதார புரட்சியின் சங்கமம். அதுபோல உடலை ஆரோக்கியாக வைக்கவும் தீமைகளையும் தீயவர்களையும் உடல் வலிமையால் பயந்து அதை துணிவுடன் தட்டி கேட்க உருவாக்கம் உடற்பயிற்சி சங்கமம். எனவே இஸ்லாம் கூறிய அனைத்து துறைகளுக்கும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதை போல இந்தத் துறையிலும் குர்ஆன் ஹதீஸ் நெறிக்குப்பட்டு இந்ததுறையில் நாமும் நமது பிள்ளைகளையும் சங்கமிப்பதற்கு எல்லா வல்லா அல்லாஹ் அருள்புரிவானாக!
தொகுத்து வழங்கியவர்:
மௌலவி ஹாபிழ்
கம்பம் சுல்தான் ஸலாஹி.

No comments:
Post a Comment