Monday, August 21, 2017

குர்பானியின் சிறப்புகளும் சட்டங்களும்


தொகுத்து வழங்கியவர் 
மௌலவி ஹாபிழ் 
கம்பம் சுல்தான் ஸலாஹி 

                  குர்பானியின் சிறப்புகளும்சட்டங்களும் 

 لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ كَذَلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِينَ

குர்பானி பிராணியின் மாமிசங்களோ அதன் உதிரங்களோ ஒருபோதும் இறைவனை அடைவதில்லை என்றாலும் உங்களின் இறையச்சம் தான் அவனை அடையும் –
அல் குர் ஆன். 22:37.

 குர்பானியின் சிறப்பு :நபி (ஸல்)அவர்களிடம் ஸஹாபாக்கள் உழ்ஹியா (குர்பானி)என்றால் என்ன ?என்று கேட்டபோது,உங்களுடைய தந்தை இப்ராஹீம் (அலைஹி)அவர்களின் சுன்னத் (வழிமுறை)என்றார்கள்.அதனால் எங்களுக்கு என்ன பலன் ?என்று கேட்டபோது "(குர்பானி பிராணியின்)ஒவ்வொரு முடிக்கும் பகரமாக நன்மையுண்டு"என்றார்கள்.(அதிகமான முடிகள் நிறைந்த)கம்பளி ஆட்டிற்குமா?என்று கேட்டபோது "ஆம்!கம்பளி ஆட்டிற்கும் ஒவ்வொரு முடிக்கும் பகரமாக நன்மையுண்டு"என்றார்கள். (நூல் :அஹ்மத்,இப்னுமாஜா)

உங்கள் குர்பானி பிராணியை கொளுத்ததாக ஆக்கிக்கொள்ளுங்கள்.அதுவே ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தில் உங்களது வாகனமாகும் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.(குன்யா பக்கம் 47)

குர்பானி யார்மீது கடமை ?
1,முஸ்லிமாக இருக்க வேண்டும் 
2,பிரயாணத்தில் இல்லாமல் சொந்த ஊரில் இருக்க வேண்டும் 
3,குடியிருக்கும் வீடும்,ஜீவனத்திற்கு உண்டான உடைமைகள் நீங்கலாக,குர்பானியுடைய நாட்களில் பவுன் 10 3/4 அதாவது 86 கிராம் அல்லது வெள்ளி 612 1/4 கிராம் அல்லது மேலே குறிப்பிட்ட பொருள்களுக்கு உண்டான மதிப்புக்கு பணவசதி இருக்கக்கூடிய முஸ்லிமான ஆண்மீதும்,பெண்மீதும் குர்பானி கொடுப்பது கடமையாக ஆக்கப்பட்டுள்ளது. (மிஷ்காத்)

மேலே குறிப்பிட்டுள்ள வசதிகள் இல்லாமல் இருந்தும் குர்பானி கொடுத்தால் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும்.

குர்பானி என்றால் என்ன ?

நம்முடைய தந்தை இப்ராஹீம் (அலைஹி)அவர்களின் தியாக உணர்வை மனப்பூர்வமாக ஏற்று,அந்த நிகழ்ச்சியை மனதில் நிறுத்தி,நபி (ஸல்)அவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு,நாமும் அல்லாஹ்வின் நெருக்கத்தையும்,அன்பையும் பெறுவதற்காக துல்ஹஜ் மாதம் பிறை 10,11 மற்றும் 12ம் நாள் அஸர் வரைக்கும் உள்ள காலக்கட்டத்தில் நம் வசதிக்கு தக்க ஆடோ,மாடோ,ஒட்டகமோ ஆகிய பிராணிகளை அறுத்து பலியிடுவதற்கு பெயர்தான் குர்பானியாகும்.

 குர்பானிக்கு தகுந்த பிராணி :

ஆடு ஒரு வருடம் பூர்த்தியானதாகவும்,மாடு இரண்டு வருடம் பூர்த்தியானதாகவும்,ஒட்டகம் ஐந்து வருடம்  பூர்த்தியானதாகவும் இருக்க வேண்டும்.எனினும் ஆறு மாத செம்மறி ஆடு நன்கு கொழுத்ததாக இருந்து ஒரு வருடம் பூர்த்தியான ஆடுகளை போன்று கொழுத்திருந்தால் அதையும் அறுப்பது கூடும்.

கூட்டு குர்பானி :

மாடு,அல்லது ஒட்டகம் இவைகளில் ஏழு நபர்கள் கூட்டு சேர்ந்து கொடுக்கலாம்.ஏழு நபரை விட குறையலாம்.(உதாரணமாக) 5,6 நபர்கள் சேர்ந்து ஒரு மாட்டை கொடுக்கலாம்.ஏழு நபர்களை விட கூடுதலாக இருந்தால் (உதாரணமாக) 8,9 நபர்கள் சேர்ந்து ஒரு மாட்டை யாருடைய குர்பானியும் கூடாது.ஏழு நபர்களுடைய நிய்யத் குர்பானி அல்லது அகீகாவாக இருக்க வேண்டும்.ஏழு நபர்களில் ஒருவர் இறைச்சிக்காக பங்கு சேர்ந்திருந்தால் அல்லது வட்டி பேங்க் லோன் போன்ற ஹராமான வருமானத்திலிருந்து பங்கு சேர்ந்தால் ஏழு நபர்களின் குர்பானியும் கூடாது.

குர்பானிக்கு தகுதியற்றவை :

குருடு,நொண்டி,கண்,காது,மற்றும் ஏதேனும் உறுப்பு மூன்றில் ஒரு பாகம் அல்லது அதை விட அதிகமாக துண்டிக்கப்பட்டது.கொம்பு முழுவதுமாக உடைந்ததது.எலும்புகளில் இறைச்சியே இல்லாத அளவு மெலிந்தது.ஆகியவற்றை குர்பானி கொடுக்கக்கூடாது.ஏதேனும் பிராணி கர்ப்பமாக இருந்தால் அதையும் குர்பானி கொடுக்கலாம்.வாங்கிய பிறகு உயிருடன் குட்டி பிறந்து விட்டால் குட்டியையும் குர்பானி கொடுப்பது வாஜிபு.அல்லது குட்டியை உயிருடன் தர்மம் செய்து விடலாம்.


وَلَا تَجُوزُ الْعَمْيَاءُ وَالْعَوْرَاءُ الْبَيِّنُ عَوَرُهَا، وَالْعَرْجَاءُ الْبَيِّنُ عَرَجُهَا وَهِيَ الَّتِي لَا تَقْدِرُ أَنْ تَمْشِيَ بِرِجْلِهَا إلَى الْمَنْسَكِ، وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا، وَمَقْطُوعَةُ الْأُذُنَيْنِ وَالْأَلْيَةِ وَالذَّنَبِ بِالْكُلِّيَّةِ، وَاَلَّتِي لَا أُذُنَ لَهَا فِي الْخِلْقَةِ، وَتُجْزِئُ السَّكَّاءُ وَهِيَ صَغِيرَةُ الْأُذُنِ فَلَا تَجُوزُ مَقْطُوعَةُ إحْدَى الْأُذُنَيْنِ بِكَمَالِهَا وَاَلَّتِي لَهَا إذْنٌ
குருடானவை, அறவே நடக்க முடியாதவை காதுகள் துண்டிக்கப்பட்டவை, காதுகள் அறவே இல்லாதவை,வால், பித்தட்டு துண்டிக்கப்பட்டவை, மேயத் தெரியாதவை, மூக்கு துண்டிக்கப்பட்டவை, மடி துண்டிக்கப்பட்டவை, கன்றுக்கு பால் கொடுக்க முடியாதவை, பால் வற்றியவை, நாக்கு இல்லாதவை,நஜீஸைத்தவிர மற்றதை சாப்பிடாதவை ஒரு கால் துண்டிக்கப்பட்டவை ஆகியன குர்பானி கொடுக்கக்கூடாது.
காதின் பிற்பகுதி துண்டிக்கப்பட்டவைகளும், காதின் ஓரம் துண்டிக்கப்பட்டவைகளும், காதில் ஓட்டை உள்ளவைகளும், காது கிழிக்கப்பட்டவைகளும் குர்பானி கொடுப்பது  மக்ரூஹ்.

நூல் : துர்ருல் முக்தார்.  ஆலம்கீரி, பக்கம் - 330

 குர்பானி கொடுப்பவர்கள் கவனிக்க வேண்டியவை :

குர்பானி கொடுக்க நினைத்தவர்கள் துல்ஹஜ் மாதம் பிறை ஒன்றில் இருந்து குர்பானி கொடுக்கும்  வரை முடிகளையும் நகங்களையும் வெட்ட கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல் :திர்மிதி.

குர்பானி இறைச்சி,கால்,குடல்,எதையும் கறி வெட்டுபவர்க்கு கூலியாக கொடுக்கக்கூடாது.தோல் உறித்து வெட்டும் கூலி தனியாக தனது பணத்திலிருந்து கொடுக்க வேண்டும்.

குர்பானி தனக்கு கடமையாயிருக்க தனக்கு கொடுக்காமல் மரணித்து விட்ட பெற்றோர்,முன்னோர்களுக்கு குர்பானி கொடுக்கக்கூடாது.தனக்கும் வீட்டில் கடமையான மற்றவர் இருந்தால் அவர்களுக்கும் கொடுத்து விட்டு மேல் மிச்சமாக தனது பெற்றோர் அல்லது உறவினர்களுக்கு குர்பானி கொடுப்பது கூடும்.
குறிப்பு:
குர்பானி கொடுக்கும் அன்பர்கள் எதுவுமே சாப்பிடாமல் இருந்து விட்டு குர்பானி கொடுத்த பின்பு அந்த குர்பானியின் ஈரலையோ அல்லது இறைச்சியையோ எடுத்து சமைத்து சாப்பிடுவது ரொம்ப விஷேசமானது.
ஏனென்றால் நபி (ஸல்) அவரகள் குர்பானி கொடுத்து அந்த குர்பானியின் இறைச்சியை சாப்பிட்டதாக ஹதீஸில் வருகிறது.
ஆகவே இப்படி செய்வதுதான் சுன்னத்தான வழி முறையாகும்.ஒரு குடும்பத்தில் குர்பானி கடமையானவர்கள் பலர்கள் சேர்ந்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் யாருடைய குர்பானியும் கூடாது.கடமையான ஒவ்வொருவரும் தனித்தனியாக கொடுக்க வேண்டும்.


குர்பானி எப்பொழுது கொடுக்க வேண்டும் :

ஹஜ் பெருநாள் தொழுகையை இமாமுடன் முடித்துவிட்டு இமாம் நிகழ்த்துகின்ற குத்பா பிரசங்கத்தையும் கேட்டுவிட்டு வீடுவந்து குர்பானி கொடுக்க வேண்டும்.தொழுகைக்கு முன் அறுத்து விட்டால் அது குர்பானியாக ஆகாது.ஏனென்றால் நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் :
யார் தொழுகைக்கு முன் அறுத்து விட்டார்களோ (அவர்கள்) அந்த இடத்தில் (தொழுகைக்கு பின்னல்) வேறொன்றை அறுத்து கொள்ளட்டும்.
நூல் :புகாரி 


குர்பானி பிராணியை அறுக்கும் முறை :

நபி (ஸல்) அவர்கள் ஹஜ் பெருநாளன்று கொழுத்த கொம்புள்ள இரண்டு கிடாய்களை அறுத்தார்கள்.அதாவது அவ்விரண்டு கிடாய்களையும் (அறுப்பதற்காக) மேற்கு திசையின் பக்கம் படுக்க வைத்து 
 இன்னீ வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய லில்லதீ பத்ரஸ் மாவாத்தி வல் அர்ழ ஹனீஃபவ்  வமா அன மினல் முஷ்ரிகீன்.

இன்ன ஸலாத்தீ வ நுஸுக்கீ வ மஹ்யாய வ மமாத்தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லாஷரீகலஹு வபி தாலிக்க உமிர்த்து வ அன மினல் முஸ்லிமீன்.

மேற்கண்ட துஆவை ஓதியபின் குர்பானியின் பிராணியை கிப்லாவின் பக்கம் முகம் இருக்குமாறு படுக்க வைத்த அறுப்பவர் 'அல்லாஹும்ம ஹாதிஹி மின்க  வலக்க  அன் முஹம்மதின் பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்' என்று ஓதியபின் (தன்கையால்)அறுத்தார்கள். நூல் :புகாரி 


ஆகவே மேற்கூறப்பட்ட ஹதீஸின் அடிப்படையில் குர்பானி கொடுக்கின்ற நாமும் நம்பிகையாலேயே குர்பானி பிராணியை கூர்மையான கத்தி கொண்டு அறுக்க வேண்டும்.அறுப்பதற்கு முன்னாள் ஹதீஸில் வந்த இன்னீ வஜ்ஜஹ்த்து என்ற வாக்கியத்தில் இருந்து வ அன மினல் முஸ்லிமீன் வரை ஓதி நம் மனதை நாம் இறைவனுக்காக இந்த குர்பானியை கொடுக்கின்றோம் என்று தூய்மை படுத்தி கொண்டு அல்லாஹும்ம மின்க வலக்க அன் ............................................பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்  என்று ஓதியபடியே கூர்மையான கத்தியைக் கொண்டு விரைவாக மூன்று அறுப்பில் அறுத்து முடிக்க வேண்டும்.குர்பானி கொடுக்கின்றவர்கள் கோடிட்ட உள்ள இடத்தில் தங்களின் பெயரை கூறிக்கொள்ளவும்.


 <> குர்பானி கொடுப்பவர் தனது கையால் அறுத்துக் கொடுக்க வேண்டும்

<> கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ளவேண்டும் .

<> அறுக்க தெரியாதவர்கள் அறுப்பவரின் கையை லேசாக பிடித்துக் கொண்டு தக்பீர் சொல்ல வேண்டும் .

<> கூட்டு குர்பானி கொடுப்பவர்கள் ஒருவர் அறுக்க மற்றவர்கள் தக்பீர் சொல்லிக் கொண்டால் போதுமானது ,

<> குர்பானி கொடுக்கும் இடத்தில் குடும்பம் நின்று கொண்டு தக்பீர் சொல்ல வேண்டும் .

<> குர்பானி பிராணியின் முகம் கிபுலாவின் பக்கம் திருப்பி வைக்க வேண்டும் .

<> தேவையான அளவிற்க்கு கால்களை பிடிக்க வேண்டும் .

<> கத்தியை கழுத்தில் அழுத்தி ஒரே அறுப்பில் நாங்கு நரம்புகள் அறுபட அறுத்து முடிக்க வேண்டும்.

<> அறுத்த பிறகு இரத்தம் முழுமையாக வெளியான பிறகு சுத்தம் செய்ய வேண்டும் .

குறிப்பு : அதன் துடிப்பு வலியால் அல்ல ! இரத்தம் வெளியாவதினால் ! ஏற்படக்கூடிய துடிப்பு மட்டுமே ! என்பது ஆராச்சி உண்மை !

அறுக்கக் கூடாத முறைகள் !!!

<> கூர்மையில்லாத கத்தியால் அறுத்து அதை துன்புறுத்தக் கூடாது .

<> கயிற்றால் கட்டி அறுக்கக் கூடாது !

<> கழுத்தை துண்டாக அறுக்கக் கூடாது !
<

 > பழக்கமில்லாதவர்கள் அறுக்க கூடாது !


அனுமதி பெறுவது :

ஒருவரின் அனுமதியின்றி வேறொருவர் குர்பானி கொடுத்தால் அது செல்லாது.அவர் மீண்டும் குர்பானி கொடுக்க வேண்டும்.

குர்பானி இறைச்சி மாற்று சகோதரர்களுக்கும் கொடுக்கலாம், 
ஒரு பிராணியை அறுப்பதை மற்றொரு பிராணிகள் பார்க்கும் வண்ணம் அறுப்பது கூடாது.

காத்திருப்பது  :

பிராணியின் உயிர் முழுவதுமாக பிரியும் வரை காத்திருந்து அறுக்க வேண்டும்.முழுவதும் உயிர் பிரியும் முன் அறுப்பதும்,தோலுரிப்பதும்,கால் தலையை உடைப்பதும் மக்ரூஹ் ஆகும்.

 மறந்துவிட்டால் :

அறுப்பவர் முஸ்லிமாக (ஆண்,பெண்) இருப்பது அவசியம்.அறுக்கும்போது பிஸ்மில்லாஹ் சொல்வதை வேண்டுமென்றே விட்டு விட்டால் அந்த பிராணியை சாப்பிடக்கூடாது.அது (அறுக்காமல்) செத்த பிராணிக்கு சமம்.மறந்து அறுத்து விட்டால் அதை சாப்பிடலாம்.

குர்பானி பிராணியை அறுத்த பின் 

அல்லாஹும்ம தகப்பல்ஹா மின்னீ தமஹா ஃபீதமீ வலஹ்மஹா ஃபீ லஹ்மீ வ அழ்ஹமஹா வ அழ்மீ வ ஜில்தஹா ஃபீ ஜில்தீ வ ஷஃரஹா ஃபீஷஃரீ வகுல்ல ஜூzஸ்இம் மின்னீ கமா தகப்பல்த்த மின் கலீலிக்க இப்ராஹீம வ ஹபீபிக்க முஹம்மதின் ஸல்லல்லாஹூ அலைஹிமா வஸல்லம் அல்லாஹூம்மஜ்ல்ஹா பிதா அன் லீ மினன்னார் என்ற துஆவை ஒத வேண்டும்.

அறுக்கும் பிராணிகளில் 7 வஸ்துக்களை  முற்றிலும் சாப்பிடக்கூடாது :

عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ وَاصِلِ بْنِ أَبِي جَمِيلٍ، عَنْ مُجَاهِدٍ،: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكْرَهُ مِنْ الشَّاةِ سَبْعًا: الدَّمَ وَالْمِرَارَ وَالذَّكَرَ وَالْأُنْثَيَيْنِ وَالْحَيَا وَالْغُدَّةَ وَالْمَثَانَةَ، وَكَانَ أَعْجَبُ الشَّاةِ إلَيْهِ مُقَدَّمهَا
1.ஆண்குறி.2. பெண்குறி.3.இரண்டு விதைகள்.4 நீர்பை. 5.இரத்தம். 6. கட்டி.களலை. 7.பித்தப்பை. ஆடு மாடு ஒட்டகம் ஆகிய வற்றில் எந்த பிராணியாக இருந்தாலும் மேற்கண்ட உறுப்புகளை சாப்பிடக்கூடாது.
நூல். அல்முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக் 4ம் பாகம். சுனனுல் குப்ரா பைஹகீ. ஹதீஸ் எண். 19700

குர்பானி தோல் :

குர்பானி தோலை விற்று ஜகாத் வாங்க தகுதியானவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்.
தோல் விற்ற பணத்தை பள்ளிவாசல்,மதரஸா நிர்வாக,கட்டிட செலவுகளுக்கு பயன்படுத்தக்கூடாது.சம்பளம் தர பயன்படுத்தக்கூடாது.அதை ஏழைகளுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்.பணியாளர்கள் உணவிற்காகவும் பயன்படுத்தக்கூடாது .ஏழை மாணவ.மாணவியர் உணவு உடைக்காக பயன்படுத்தலாம்.

பள்ளிவாசல்,மதரஸா நிர்வாகத்தினர் தோல்களை வசூலித்து விற்று அந்தப் பணத்தை ஏழைகளுக்கு அல்லது குமர்  காரியத்திற்கு முறைப்படி விநியோகித்தால் அவர்களிடம் தோலைக் கொடுப்பது கூடும்.


وعن عبد الله بن عمر رضي الله عنهما قال: أقام النبي صلى الله عليه وسلم بالمدينة عشر سنين يضحي. رواه أحمد والترمذي وقال: حديث حسن (4) .

நபி (ஸல்) அவர்கள் மதினாவில் தங்கிய பத்து ஆண்டுகளும் குர்பானி கொடுத்தார்கள் என்று அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
நூல்.திர்மிதி. அஹ்மத்.


عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَا عَمِلَ آدَمِيٌّ مِنْ عَمَلٍ يَوْمَ النَّحْرِ أَحَبَّ إِلَى اللهِ مِنْ إِهْرَاقِ الدَّمِ، إِنَّهُ لَيَأْتِي يَوْمَ القِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَظْلاَفِهَا، وَأَنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللهِ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ مِنَ الأَرْضِ، فَطِيبُوا بِهَا نَفْسًا.
ஈதுல் அழ்ஹாவுடைய நாளில் மனிதன் செய்கின்ற நற்செயல்களில் இறைவனுக்கு விருப்பமானது குர்பானி கொடுப்பதாகும்நிச்சயமாக குர்பானி அதன் முடிகள்கொம்புகள்குளம்புகளுடன் கியாமத் நாளில் குர்பானி கொடுத்தவனைத் தேடி வருகிறதுஅதன் இரத்தம் பூமியில் விழுவதற்கு முன்னர் அல்லாஹ்வை அடைந்து விடுகிறது.“
அறிவிப்பவர் : ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
நூல் : திர்மிதி. இப்னு மாஜா. 3126

குர்பானி கொடுக்கும் நேரம்
ஈதுல் ளுஹாவின் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று சூரியன் உதயமான நேரத்திலிருந்து குர்பானி கொடுத்தல் துவங்குகிறது.
பெருநாள் தொழுகையை அடுத்து குத்பா ஓதி முடிந்தபின் குர்பானி கொடுத்தல் சிறந்ததாகும்.
நூல்: மிஷ்காத்.

துல்ஹஜ் பிறை 10,11,12 ஆகிய மூன்று நாட்களிலும் குர்பானி கொடுக்கலாம். இதில் குர்பானி கொடுக்க முதல் (பெரு) நாளே சிறந்ததென ஹஜ்ரத் உமர், ஹஜ்ரத் அலீ, ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹும் போன்ற நபித் தோழர்கள் அறிவிக்கின்றனர்.
நூல்: ஹிதாயா.:









No comments:

Post a Comment