ரமழானே வருக
ரமழான் மாத நோன்பு ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. அதன்படி நபி (ஸல்) அவர்கள் ஒன்பது ஆண்டுகள் நோன்பு நோற்றார்கள்.
நன்மைகளை குவிக்கும் நற்பாக்கியமிகு ரமளான் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது, ரமளானை வரவேற்க நாம் தயாராக இருக்கிறோமா?. ஒரு பரகத்தான மாதம். குர்ஆன் இறங்கிய மாதம் என்று இந்த மாதத்தின் அறிமுகத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். நேர்வழியும் உம்மத்தின் தெளிவும் அடங்கிய வேத புத்தகம் இறங்க அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம் இந்த ரமளான் மாதம். இந்த மாதத்திற்கு நாம் தயாராக வேண்டும்.
ரமலான் மாதம் வந்து விட்டால் நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகிறது. சொர்க்க வாசல்கள் திறக்கப்படுகிறது. உலகத்தில் உள்ள ஷைத்தான்களெல்லாம் விலங்கிடப்படுகிறார்கள் இது நமக்கு கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பு.உலகத்திலே ஒவ்வொன்றுக்கும் ஒரு பருவம் (season)
இருப்பது போல நன்மைகள் அதிகம் செய்து கொள்ளவும் நல்ல நிம்மதியான வழியை தேடிக்கொள்ளவும் முஸ்லிம்களுக்கு வழங்கப்படுகிற ஒரு சீசன் தான் ரமலான் மாதம். ரமலான் மாதத்தை அடிந்து கொண்டால் அதிலே நீங்கள் நோன்பு வைத்து கொள்ளுங்கள் என திருமறை கூறுகிறது.
فمن شهد منكم الشهر فليصمه
ஆகவே உங்களில் யார் அம்மாதத்தை (ரமலானை ) அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும் (குர் ஆன்- 02:185)
அரபி மாதங்கள் என அழைக்கப்படும் சந்திர மாதங்களில் 9 வது மாதம் ரமளான் மாதமாகும். இந்த ரமளான் மாதத்திற்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ (183)
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்ததுபோல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது!(அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்!(அல்குர்ஆன்2:183)
அல்லாஹ் மற்றொரு இடத்தில் சொல்கிறான்:
شَهْرُ رَمَضَانَ الَّذِيْ اُنْزِلَ فِيْهِ الْقُرْاَنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ
'ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான்
மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும் தெளிவான சான்றுகளைக்
கொண்டதாகவும் (நன்மை, தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப்
பெற்றது'. (அல்குர்ஆன் 2 : 185)
ஹஜ்ரத் ஸல்மான் பார்ஸி ரலியல்லாஹு அன்ஹு
அவர்கள் அறிவித்திருக்கிறார்கள், 'ஷஃபான் மாதத்தின் இறுதியிலே அண்ணல்
எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு உபதேசம்
செய்வார்கள்,' உங்கள் மீது பரக்கத் செய்யப்பட்ட ஒரு மாதம் நிழலிட்டு
இருக்கிறது. இம் மாதத்திலே ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த லைலத்துல் கத்ர்
எனும் இரவு உள்ளது. இம்மாதத்தில் அல்லாஹ் நோன்பு நோற்பதைக் கட்டாயக்
கடமையாக விதித்துள்ளான். அம் மாதத்தில் இரவில் நின்று வணங்குவதை
சுன்னத்தாக்கியுள்ளான். இம்மாதத்தில் ஒருவர் ஒ ருபர்ளை நிறைவேற்றினால் ஒரு
அடிமையை உரிமை விட்டவர் போலவும், மற்ற மாதங்களில் எழுபது பர்ளுகளை
நிறைவேற்றியவரைப் போன்றும் ஆவார். மேலம் முஃமீன்களின் இரணத்தை
விஸ்தீரணமாக்கப்படுகின்ற மாதமாகும். எவனொருவன் நோன்பாளிக்கு நோன்பு திறக்க
கொடுக்கின்றானோ அவன் ஒரு அடிமையை உரிமை விட்ட நன்மையை பெற்றுக்
கொள்கிறான். இது பொறுமையுடைய மாதம் என்று பெருமானார் அவர்கள் கூறிய
நேரத்திலே ஸஹாபாக்கள் எல்லாம் 'யாரஸூலல்லாஹ் எங்களில் எவரும் நோன்பு திறக்க
கொடுத்த சக்தி பெற்றவராக இல்லையே என்று கேட்க, 'அல்லாஹ் இந்த தவாபை
பழத்தாலோ ஒரு முடர் பாலினாலோ அல்லது ஒரு முடர் தண்ணீராலோ நோன்பு திறக்கச்
செய்தவர்களுக்கு கொடுக்கின்றான்' என்று கூறினார்கள்.
உலகமகா அற்புதமான திருக்குர்ஆன் ரமளான்
மாதத்தில் இறக்கப்பட்ட காரணத்திற்காக அந்த ரமளான் மாதத்தில் நோன்பு வைக்க
வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. இது அதற்குரிய மற்றொரு சிறப்பு.
மேலும் ரமலான் முதலாவது இரவில் நபி
இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சுஹூபுகள் இறக்கப்பட்டன. அதன்பின் 700
ஆண்டுகளுக்குப் பிறகு ரமலான் ஆறாவது நாளில் தௌராத் வேதம் நபி மூஸா
அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அருளப்பட்டது. அதன் பிறகு 500 ஆண்டுகளுக்குப்
பிறகு ரமலான் 12ல் ஜபூர் வேதம் நபி தாவூது அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும்,
அதன் பிறகு ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குப் பின் ரமலான் 18ல் இன்ஜீல்
வேதம் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் அதன்பின் அறுநூற்று இருபது
ஆண்டுகளுக்கு பின் நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களுக்கு புர்கான் வேதமும் அருளப்பட்டது.
வான்மறைகள் வழங்கப்பட்ட வளமான மாதம்,
நன்மைகள் நிறைந்த புனிதமான மாதம், அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் நிறைந்த
மாதம், எந்த மாதத்தை நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்
ஷஹ்ரே அஜீம், ஷஹ்ரே முபாரக் என்று வர்ணித்துச் சொன்னார்களோ அந்த மாதம் தான்
இது.
மேலும் ஷஃபான் எனது மாதம் என்றும், ரமலான்
எனது உம்மத்தினரின் மாதம் என்றும் இம்மாதத்தில் எவன் ஒருவன் நோன்பு
நோற்றானோ அவன் அல்லாஹ்வின் மிகப்பெரும் திருப்தியை அடைந்து கொள்வான்
என்றும் கூறியுள்ளார்கள்.
நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு
செயலும் அவனுக்குரியதாகும் ! நிச்சயமாக நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது.
அதற்கு நானே கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறினான். நோன்பு
(பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும் ! எனவே உங்களில் ஒருவர் நோன்பு
நோற்றால் அவர் கெட்ட பேச்சுக்கள் பேச வேண்டாம் ! கூச்சலிட்டு சச்சரவு செய்ய
வேண்டாம் ! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால் நான்
நோன்பாளி ! என்று அவர் சொல்லட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ !
அவன் மேல் ஆணையாக ! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடையாகிறது
அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு
இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. 1 நோன்பு திறக்கும் பொழுது அவன்
மகிழ்ச்சியடைகிறான் 2 தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக
அவன் மகிழ்ச்சியடைகிறான்
நூல்: புகாரி அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு)
'நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும்
யார் ரமலானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள்
மன்னிக்கப்படுகின்றன'. (நபிமொழி) (அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு),
திர்மிதி-619
'ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)நூல்கள்: புகாரீ (1899)முஸ்லிம் (1957)'ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்' என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
ரமழான் மகத்தான மாதம் ஏன் ?
இந்த மாதத்தில்தான் மகத்தான இரவு ஒன்றும் பொதிந்து இருக்கிறது.அந்த ஒற்றை இரவில் ஆயிரக்கணக்கான மாதங்களுக்கான அருள்வளங்களின் புதையல்கள் ஈட்டப்பட்டிருக்கின்றன.அந்த அருவளம் மிக்க இரவில்தான் இறைவன் தன்னுடைய மிகப்பெரும் அருளை வழங்கினான்.
انا انزلناه في ليلة مبركة
நாம் இதனை தெளிவான வேதத்தினை அருள்பாலிக்கப்பட்ட ஓர் இரவில் இறக்கி வைத்தோம். அல்குர்ஆன் 44:3
அந்த வேதம் எத்தகையது ?
رحمة من ربك
இது உம்முடைய இறைவனின் கருணை(யினால் உம்மீது அருளப்பட்டிருக்கின்றது) என்றே குர்ஆன் குறித்து சொல்லப்பட்டுள்ளது.
ஆனால்,உண்மையில் சொல்லப்போனால் இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் புனிதமான,தூய்மையான நாள் ஆகும்.இந்த மாதத்தின் ஒவ்வொரு இரவும் அருள்வளம் மிக்க இரவு ஆகும்.
அருள்மறை இறங்கிய மாதம்
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ
"ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது”(அல் குர்ஆன்:2:185)
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
"நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்” எனவும் குறிப்பிடுகின்றான்.(அல் குர்ஆன்:9:01)
எனவே, ரமழான் மாதம் அது குர்ஆனின் மாதம் அல்லாஹ்வின் வழிகாட் டல்கள் மனித சமூகத்திற்கு இறக்கியருளப்பட்ட மாதம். அதற்கு நன்றி சொல்லும் வகையிலேயே இந்த மாதம் முழுவதும் நாம் பசித்திருக்கிறோம் தாகித்திருக்கிறோம் இரவெல்லாம் நின்று
வணங்குகின்றோம்
. அல் குர்ஆனின் சிறப்பு
அல்குர்ஆன் இறக்கியருள்ளப்பட்ட ரமழான்
மாதத்தில் அல்குர்ஆன் இந்த உலகில் எத்தகைய பெரும் புரட்சிகளைச் செய்தது,
அது நிகழ்த்திய சாதனைகள் என்ன, மனித உள்ளங்களில் அது ஏற்படுத்திய
தாக்கங்கள் எத்தகையவை? என்பதையல்லாம் சிந்தித்துப் பார்க்க
கடமைப்பட்டுள்ளோம்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை
உருவிய வாளோடு படுகொலை செய்யவந்த உமர் இப்னு கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு)
அவர்களை இஸ்லாத்தின், நபிவர்களின் பாதுகாவலனாக மாற்றிய பெருமை அல்குர்ஆனைச்
சாரும். ஆல்குர்ஆனின் ஓர் இரண்டு வசனங்கள் உமர் (ரழியல் லாஹு அன்ஹு)
அவர்களின் உள்ளத்தில் அதிர்வை, தாக்கத்தை, மாற்றத்தை ஏற்படுத்தியது.
ஈற்றில் அவர் மனிதப் புனிதனாக மாறுகின்றார்.
பக்தாதில் அன்று மிகவும் பேர் போன ஒரு
வழிப்பறிக் கொள்ளைக்காரராக இருந்த புழைல் இப்னு இயாழ் என்பவர் ஹரம்
ஷரீபுடைய இமாமாக மாறினார் என்றால், அதற்குக் காரணம் ஓர் அல்குர்ஆனிய
வசனம்தான்.
“ஈமான் கொண்டவர்களே! அவர்களுக்கு
அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ் வையும் இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும்
நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா?” (ஸூரதுல் ஹதீத்: 16) என்ற
அல்குர்ஆன் வசனம் ஏற்படுத்திய அதிர்வு புழைல் இப்னு இயாழுடைய முழு
வாழ்வையுமே மாற்றியமைத்தது.
அதே அல்குர்ஆனைத்தான் நாமும் அணுதினமும்
மீட்டி மீட்டி ஓதுகிறோம் பாராயணம் செய்கிறோம். அல்குர்ஆன் உமர் இப்னு
கத்தாப் (ரழியல் லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய அதிர்வை
எம்முடைய வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கிறதா? புழைல் இப்னு இயாழ்
(ரஹிமஹுல் லாஹ்) போன்ற ஆயிரமாயிரம் உள்ளங்களை உசுப்பிய இந்த அல்குர்ஆன்
எமது உள்ளத்தில் மாற்றத்தை, தாக்கத்தை செலுத்தியிருக்கிறதா என்பதை
சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.
ஆரம்ப கால ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஉத்
தாபிஈன்கள், ஸலபுகள் அல்குர்ஆனின் மூலமாக அற்புதமான வழிகாட்டல்களைப்
பெற்றார்கள். அதன் மூலம் அவர்களது வாழ்க்கைப் போக்கையே மாற்றிக்
கொண்டார்கள். அந்த மாற்றம் எங்களிடம் வர வேண்டும் என்றிருந்தால், நாம்
அல்குர்ஆனை அணுகும் முறையில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
அம்மாதத்தில் நாம் செய்ய வேண்டியது நோன்பு நோற்பது மட்டும் தானா...?
- இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து. நன்மைகளை எதிர்பார்த்து நோன்பு நோற்க வேண்டும். அதே அடிப்படையில் இரவு வணக்கங்களை நிறைவேற்ற வேண்டும். இவ்விரண்டு செயற்பாடுகளும் நம்முடைய முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.
- ஐவேளை தொழுகைகளையும் பள்ளிவாசலுக்கு சென்று கூட்டா(ஜமாஅத்தா)க நிறைவேற்ற வேண்டும். இது கூட்டு வாழ்க்கை முறையையும். சகோதர பாசத்தையும் பலப்படுத்த உதவி செய்யும்.
- தினந்தோறும் திருக்குர்ஆனை உள்ளச்சத்துடன். பொருள் விளங்கி, ஓத வேண்டிய முறையில் ஓத வேண்டும். இது இறைவனின் கருணையும். மன நிம்மதியும் ஏற்பட வழிவகுக்கும்.
- இஸ்லாமிய அறிவை கற்றுக்கொள்ள அல்லது கற்றுக்கொடுக்க முயற்சி செய்ய வேண்டும். இது ஈருலுக வெற்றிக்குண்டான பாதையை திறந்து வைக்கும்.
- இரவு வணக்கம் என்ற தராவீஹ் மற்றும் தஹஜ்ஜத் தொழுகைகளை அதிகமாக தொடர்ந்து தொழுது வர வேண்டும். இவை இறைவனின் நெருக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த வழிமுறையாகும்.
- உறவுமுறையை பேணி வாழ வேண்டும். இது குடும்ப சீரமைப்பிற்கும். சொந்தங்கள் சேர்ந்து வாழ்வதற்கும் சீரான வழியை காட்டும்.
- இல்லாருக்கும்.
எளியோருக்கும் முடிந்த வரை உதவிகள் புரிய வேண்டும். இது பிறர் மீது அன்பு
செலுத்துதல் என்ற மேலான குணத்தை உள்ளத்தில் ஊற்றெடுக்க வைக்கும்
அன்பின் இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளே...! தயாராகுவோம் நாம்...! - இறைவழிபாட்டில் திளைத்திருப்போம்! இறைமறை குர்ஆனை ஓதுவதில் மூழ்கியிருப்போம்!
- வீண் பேச்சுகளை தவிர்ந்திருப்போம்! வீணாணவைகளை விட்டும் ஒதுங்கியிருப்போம்!
- பகல் முழுவதும் பசித்திருந்து நோன்பிருப்போம்! இரவு முழுவதும் விழித்திருந்து இறையைத் தொழுவோம்!
- புனித ரமழானில் புதையலைத் தேடிப் புறப்படுவோம்! நாளை மறுமையில் பொன்னான வாழ்வை சென்றடைவோம்!
- இங்கே நாள்தோறும் நன்மைகள் பல புரிவோம்! ஈருலகிலும் நாயன் அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சிப்போம்!
- அல்குர்ஆனின் வழிமுறையில் செல்வோம்! அல்லாஹ்வின் அளவிலா அருளைப் பெறுவோம்!
- சுன்னத்தைப் பேணி சிறப்பாக வாழ்வோம்! சுகந்தரும் சுவனத்தில் சுதந்திரமாக நுழைவோம்!
நாம் என்ன செய்ய வேண்டும்
ரமழான் மாதத்தை வரவேற்பதற்கு முன் முதலாவதாக நாம் என்ன செய்ய வேண்டும்?
ரமழானின் மகத்துவத்தை,அதன் தனிச்சிறப்பை,அதன் நோக்கத்தை,அதன் கண்ணியத்தை அவை பற்றிய உணர்வுகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
கடந்த
காலங்களில் நாம் எவ்வளவோ பாவங்களி்ல் ஈடுபட்டிருப்போம் அல்லது பாவம்
செய்வதற்கு உடந்தையாக கூட இருந்திருப்போம். அந்தக் காரியங்களை எல்லாம்
ரமழான் வருவதற்கு முன் கை விட்டு விட வேண்டும். கை விட்டு விடுவது
மட்டுமன்றி, நாம் முன்னர் செய்த பாவங்களை அல்லாஹ்விடம் முறையிட்டு
மன்றாடி, இதன் பிறகு இநத்ப்பாவங்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன் என்று
அல்லாஹ்விடம் சத்தியப்பிரமாணம் செய்து விட்டு, இந்த ரமழனை ஆரம்பித்தால்
மாத்திரமே இந்த ரமழானை வரவேற்றதற்குரிய முழுப் பயனை பெற்றுக்கொள்வோம்.
ரமழானை அடைந்து முழு நோன்பை அடையும் உடல் ஆரோக்கியத்தையும்,
புனித இரவாம் லைலத்துல் கத்ரை அடையும் பாக்கியத்தையும,
புனித ஈதுல் பித்ர் பெருநாளை அடையும் பாக்கியத்தையும் யாஅல்லாஹ் எங்கள் அனைவருக்கும் இந்த நற்பாக்கித்தை தருவாயாக !
தஹ்த்தஷ்ஷரா குழுவினர்கள் :
மௌலவி K ஜஃபர் சாதிக் நூரி
மௌலவி VA முஹம்மது ஹுசைன் சிராஜீ
மௌலவி S M K அப்துல் காதிர் ரஹ்மானீ
மௌலவி S ரசூல் மைதீன் சிராஜீ
மௌலவி A மஹ்மூதுல் ஹஸன் தாவூதீ
மௌலவி M ஷாஜஹான் உஸ்மானீ
மௌலவி K அப்துல் காதீர் காஸிமி
மௌலவி S அல்லா பகஷ் மன்பஈ
மௌலவி S சுல்தான் ஜைனீ.
தஹ்த்தஷ்ஷரா குழுவினர்கள் :
மௌலவி K ஜஃபர் சாதிக் நூரி
மௌலவி VA முஹம்மது ஹுசைன் சிராஜீ
மௌலவி S M K அப்துல் காதிர் ரஹ்மானீ
மௌலவி S ரசூல் மைதீன் சிராஜீ
மௌலவி A மஹ்மூதுல் ஹஸன் தாவூதீ
மௌலவி M ஷாஜஹான் உஸ்மானீ
மௌலவி K அப்துல் காதீர் காஸிமி
மௌலவி S அல்லா பகஷ் மன்பஈ
மௌலவி S சுல்தான் ஜைனீ.

No comments:
Post a Comment